Nov 8, 2026 - 12:03 PM

நாடெங்கும் பரவியுள்ள இருளை வென்று ஞானத்தின் ஒளி பிரகாசிக்கட்டும் என அனைத்து இலங்கை மக்களுக்கும் உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்களுக்கும் சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தை வெற்றிபெறச் செய்வதற்கு தீபாவளி திருநாள் ஒட்டுமொத்த இலங்கையருக்குமே மிக முக்கியமானதொரு தேசிய விழாவாகும் என்றும் திலித் ஜயவீர தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஒரு நாடாக உலகிற்கு முன்னால் நமது கலாசாரத்தின் தனித்துவத்தையும் பன்முகத்தன்மையையும் சிறப்புற வெளிப்படுத்துவதற்கு தீபாவளி போன்ற பண்டிகைகள் பெரும் பக்கபலமாக அமைகின்றன எனக் குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து இந்து பக்தர்களுக்கும் தனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
































