Nov 9, 2026 - 11:15 AM

மலேசியாவின் கோலாலம்பூரில் அண்மையில் நடைபெற்ற Dragons of Asia விருது வழங்கும் நிகழ்வில் HUTCH Sri Lanka நிறுவனம் ஆசிய பிராந்தியத்தின் ரீதியில் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளது. ஆசியாவின் பல்வேறு நாடுகளின் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் துறைகளில் சிறந்து விளங்கும் படைப்பாற்றல் மிக்க செயற்பாடுகளையும், அவற்றின் வர்த்தக ரீதியான தாக்கங்களையும் மதிப்பீடு செய்து வழங்கப்படும் முதன்மையான விருது நிகழ்வாக Dragons of Asia திகழ்கிறது. சிங்கப்பூர், சீனா, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நிறுவனங்களின் ஆக்கபூர்வமான சந்தைப்படுத்தல் முயற்சிகள் இவ்விருதுகளுக்காகப் பரிசீலிக்கப்படுகின்றன.
அந்த வகையில், ஆசியாவிலேயே செயற்கை நுண்ணறிவின் சிறந்த பயன்பாட்டுக்கான (Best Use of Artificial Intelligence) உயரிய விருதையும், இலங்கையின் சிறந்த படைப்பாற்றல் மிக்க சந்தைப்படுத்தல் பிரசாரத்துக்கான (Best Creative Campaign) உயரிய விருதையும் HUTCH தன்வசப்படுத்தியுள்ளது. இந்த இரட்டை உயரிய விருதுகள் மூலம், இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் படைப்பாற்றல் மிக்க சந்தைப்படுத்தல் துறையில் HUTCH முன்னணி நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இதன் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளது.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் HUTCH பெற்றுள்ள Pinnacle உயரிய விருது, சர்வதேச அரங்கில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும், புரட்சிகரமான படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் திறன் இலங்கைக்கும் உண்டு என்பதை எடுத்துக்காட்டுகிறது. இதற்கு ஒரு நாட்டின் சந்தை அளவோ அல்லது அதன் சர்வதேச அந்தஸ்தோ தடையாக இருக்க முடியாது என்பதையும் இந்தச் சாதனை நிரூபித்துள்ளது. வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களைப் படைப்பாற்றலுடன் பயன்படுத்துவதில் HUTCH முன்னுதாரணமாகத் திகழ்கிறது. வழக்கமான படைப்பாற்றலின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும், செயற்கை நுண்ணறிவின் மூலம் இதுவரை சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட புதிய சிந்தனைகளை செயற்படுத்துவதற்கும் அந்நிறுவனம் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது.
இந்த விருதுகள், முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக HUTCH கொண்டுள்ள நிலையை மேலும் உறுதிப்படுத்துகின்றன. வாடிக்கையாளர் பெறுமதி முகாமைத்துவம், வர்த்தகச் செயற்பாடுகள், தொலைத்தொடர்பு வலையமைப்பு முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட நிறுவனத்தின் பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவது அதன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் புத்தாக்கச் சிந்தனைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
HUTCH ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தாய் நிறுவனமான CK Hutchison Holdings, உலகளாவிய Fortune 500 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன், ஐரோப்பியா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த ஒன்பது நாடுகளில் தொலைத்தொடர்புத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.உலகளாவிய ரீதியில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் இந்நிறுவனம், உலகம் முழுவதும் 350,000-க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. துறைமுகங்கள், உட்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம், எரிசக்தி, நிதி மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தி, சர்வதேச வர்த்தக அரங்கில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளது.
































