Nov 9, 2026 - 01:46 PM

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஆர்எக்ஸ்' (RX) என பெயரிடப்பட்டுள்ளது.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘பாம்’ திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் விஷால் வெங்கட் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் நாசர், ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹேசம் அப்துல் வஹாப் இசைப் அமைக்கும் இப்படத்திற்கு ஹரிஹரன் ராஜு கதையமைக்க, எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரெஜினா நெரிசல் மிகுந்த ரயில் பெட்டியில் பயணிப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது கம்பீரமான மற்றும் அடக்கமான தோற்றம், படத்தில் ஒரு வலுவான சஸ்பென்ஸ் நிறைந்த பின்னணி இருப்பதை உணர்த்துகிறது.
படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுத் திகதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
































