Nov 9, 2026 - 01:27 PM
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்

நோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்க பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் நேற்று (08) மாலை முதல் வான் மேவி பாய்கின்றது.
இந்த நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக களனி ஆற்றின் நீர்மட்டம் சற்றளவு உயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதனுடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து, நிரம்பி வழியும் நிலையை நெருங்கி வருவதாக பொறியலாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், கெனியன், லக்சபான, நவ லக்சபான, பொல்பிட்டிய மற்றும் விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களின் மின் உற்பத்தி கொள்ளளவு அதிகபட்ச மட்டத்தில் செயல்படுத்தப்படுவதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீர்த்தேக்கங்களின் பொறுப்பு பொறியாளர்கள், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று 27.5 மில்லிமீட்டர் மழை பதிவானதாகத் தெரிவித்தனர்.
































