Nov 10, 2026 - 02:25 PM

சபரிமலை ஐயப்பன் கோவில் பருவகாலம் நெருங்கும்நிலையில், நெய் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிவதாக தெரிவிக்கப்படுகிறது.
திருவிதாங்கூர் தேவஸ்தான வாரிய கூட்டம் நேற்று நடந்த நிலையில், அதன் தலைவர் ஜெயகுமார் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சபரிமலையில் நெய் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற கவலை எழுந்துள்ளது. புதிய முன்பதிவு 17ஆம் திகதியிலிருந்து தான் வரும். அதுவரை கூடுதல் நெய்யை கொள்முதல் செய்வது பற்றி ஆலோசனை நடத்தினோம். ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஏனென்றால் கடந்த ஆண்டு கொள்முதலில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்த சட்ட அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதுதொடர்பாக சட்ட ஆலோசனை பெற்ற பிறகு நெய் கொள்முதல் செய்யப்படும். மற்றபடி, அரவணை பாயாசம், அப்பம் இருப்பு குறித்து பிரச்சினை இல்லை என அவர் கூறியுள்ளார்.

































