Nov 10, 2026 - 02:30 PM

விநியோகம் மற்றும் மூலப்பொருட்கள் முகாமைத்துவ நிறுவனத்தால் (Institute of Supply and Materials Management - ISMM) கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்தப்பட்ட ‘National Supply Chain Excellence Awards 2026’ (தேசிய விநியோகச் சங்கிலி விசேடத்துவ விருதுகள் 2026) நிகழ்வில், பாரிய மட்ட உற்பத்திப் பிரிவில் விசேட பாராட்டை (Special Commendation) Pelwatte Dairy Industries Limited (PDIL) நிறுவனம் பெற்றுள்ளது.
தனது பால் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக, பொறுப்பான நடைமுறைகள் மற்றும் மனிதவளத்தை வலுப்படுத்துவதற்கு நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான முயற்சிகள், இந்த அங்கீகாரம் மூலம் பிரதிபலிக்கின்றன. இது 2025ஆம் ஆண்டில் பெற்ற பாராட்டு விருதைக் கடந்த ஒரு முன்னேற்றமாகும். நிறுவனத்தின் விநியோகச் சங்கிலிச் செயற்பாட்டிற்கு வெளிப்புற அங்கீகாரத்தை வழங்கிய இந்த விருதானது, 80 விண்ணப்பதாரர்கள் போட்டியிட்ட ஒரு களத்திலிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
உற்பத்தி மையங்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதற்கு விநியோகச் சங்கிலிகள் அத்தியாவசியமானவை ஆகும். நம்பகமான தயாரிப்பு விநியோகத்தை உறுதி செய்வதற்காக, ஊழியர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள் ஆகியோரை ஒரு பால் உற்பத்தியாளர் ஒருங்கிணைக்க வேண்டும். பெல்வத்த டெய்ரி நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு இந்த ஒன்றுடனொன்று இணைக்கப்பட்ட முயற்சிகள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த அங்கீகாரம் வெளிப்படுத்துகிறது.
இந்த சாதனை குறித்து, பெல்வத்த டெய்ரி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மல் விக்ரமநாயக்க தெரிவிக்கையில்: "நாம் வழங்கும் ஒவ்வொரு தயாரிப்பிலும் வழங்கப்படும் உழைப்புக்கான சான்றாக இந்த அங்கீகாரத்தை நாம் கருதுகிறோம். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் எம்மை ஆதரிக்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் பங்காளர்களுடன் இணைந்து, எமது விநியோகச் சங்கிலி குழுவானது எமது செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்கவும், எமது தயாரிப்புகள் வாடிக்கையாளர்களைத் தொடர்ச்சியாக சென்றடைவதை உறுதி செய்யவும் தினமும் பாடுபடுகிறது. கடந்த வருடம் நாம் பாராட்டு விருதைப் பெற்றதைத் தொடர்ந்து இவ்வருடம் விசேட பாராட்டைப் பெறுவது ஊக்கமளிப்பதாக அமைந்த போதிலும், மேலும் பல விடயங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது என்பதை நாம் அறிவோம். எமது முன்னேற்றத்தை அங்கீகரித்து கௌரவித்தமைக்கும், நிறுவனங்கள் தொடர்ச்சியாக மேம்படுவதற்கான ஒரு தளத்தை வழங்கியமைக்கும் ISMM இற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக, எமது மனித வளத்தையும் நடைமுறைகளையும் வலுப்படுத்துவதில் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறோம்." என்றார்.
இந்த சாதனையானது PDIL நிறுவனத்தின் பங்காளர்களின் வலையமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி குழுவின் கூட்டு முயற்சிகளுக்கான கௌரவமாகும். அவர்களின் பணிகளானது தயாரிப்புகளை, உற்பத்தியில் இருந்து சந்தைக்கு கொண்டு செல்வதற்கு ஆதரவளிக்கின்றன. அது மாத்திரமன்றி, விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தில் தமது முன்னேற்றத்தைக் கட்டியெழுப்பும் வேளையில், தொடர்ச்சியான மேப்பாடு குறித்த நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் இது வலுப்படுத்துகிறது.
பெல்வத்த டெய்ரி நிறுவனத்தை பொறுத்த வரை, இந்த அங்கீகாரமானது ஒரு முடிவுப் புள்ளி அல்ல. மாறாக ஒரு தொடர்ச்சியான பயணத்தின் மைல்கல்லாகும். வாடிக்கையாளர்களுக்கு தமது தயாரிப்புகளை நம்பகமான முறையில் விநியோகிப்பதற்கு ஆதரவளிக்கும் பங்காளித்துவங்கள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதில் நிறுவனம் தொடர்ந்தும் அதன் கவனத்தை செலுத்தும்.

































