Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில்...

மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில்...

பெரும் துயரத்தில் மக்கள்!

பெரும் துயரத்தில் மக்கள்!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

போக்குவரத்து இரு மணி நேரம் முடக்கம்!

போக்குவரத்து இரு மணி நேரம் முடக்கம்!

    Mobitel Inner 1278

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலந்த ஜாலியான படங்களை எடுப்பதில் சுந்தர்.சிக்கு முக்கியமான இடம் உண்டு. அப்படி அவர் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘கலகலப்பு’. இந்தப் படத்தில் விமல், சிவா நாயகர்களாக நடித்தனர். அஞ்சலி, ஓவியா நாயகிகளாக நடித்தனர்.


    சந்தானம், இளவரசு, மனோபாலா, வி.எஸ்.ராகவன் உள்ளிட்ட பலர் நடித்தனர். படத்துக்கு விஜய் எபினேசர் இசையமைத்தார். இந்தப் படத்தை தனது அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் மூலம் சுந்தர்.சி - குஷ்பு தயாரித்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தது.


    தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த காமெடி படங்களில் ஒன்றாக ‘கலகலப்பு’ பார்க்கப்படுகிறது. எத்தனை முறை டிவியில் போட்டாலும், அதைப் பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. மிக எளிமையான கதையை தனது திரைக்கதையால் கலகலப்பாக்கியிருப்பார் சுந்தர்.சி. இந்தப் படம் அப்போது 14 ஆண்டுகளுக்கு முன்பே 7 கோடி ரூபா வரை பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் ஈட்டியது.


    இந்நிலையில், இந்தப் படத்தில் ஒரு காட்சியில் வீட்டில் கடும் கோபமடையும் நடிகை அஞ்சலி ஆக்ரோஷமாக கத்துவார். அவருடைய அந்த சத்தம் அந்த வீட்டில் இருந்தவர்களைப் புயல் காற்று போல பறக்கவிடும். இந்த காட்சி ரசிக்க வைத்தது. இந்த காட்சிக்கு பின்னால் இருக்கும் காரணத்தை இயக்குநர் சுந்தர்.சி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.


    அவர் கூறும்போது, “இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் மேட்ச் விளையாடிக்கொண்டிருந்த நேரம் அது. நான் பயங்கரமான கிரிக்கெட் ரசிகன். சச்சின் 99 சதங்களை அடித்துள்ளார். அவருடைய 100 ஆவது சதத்துக்காக நான் காத்திருந்தேன். அப்போதெல்லாம் நினைத்தபடி போனில் மேட்ச் பார்க்க முடியாது. அதனால் என்னுடைய யூனிட் வண்டியில் ஆண்டனா செட் செய்து டிவியில் கனெக்ட் செய்து பார்ப்போம்.


    ‘கலகலப்பு’ படத்தில் ‘இவளுக இம்ச தாங்க முடியல’ என்ற பாடல் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரம் அது. அப்போது சச்சின் 100 ஆவது சதம் அடிப்பதற்கான மேட்ச் நடந்து கொண்டிருந்தது. அன்று அவர் ஆடிய டெஸ்ட் மேட்சில் 90 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

    நான் மிகவும் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது நாங்கள் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தோம். அஞ்சலி வந்து பார்த்தார். பாடலுக்கான படப்பிடிப்பை நடத்தாமல், எல்லோரும் மேட்ச் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என கடுப்பாகிவிட்டார். அப்போது அவர் கத்த ஆரம்பித்தார். அதை வைத்துதான் ‘கலகலப்பு’ படத்தில் அந்த காட்சியைப் படமாக்கினோம். ஆக அஞ்சலி கத்த சச்சின் தான் காரணம்” என்றார்.