Nov 11, 2026 - 03:59 PM

இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தமது 11 வது டெஸ்ட் சதத்தை இன்று (11) பூர்த்தி செய்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் தொடரின் முதலாம் இனிங்ஸின் போதே அவர் இந்த சதத்தை பதிவு செய்துள்ளார்.
முன்னதாக இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வாவும் தமது 14 வது டெஸ்ட் சதத்தை பெற்றிருந்தார்.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்று வருகின்றது.
போட்டியில் தமது முதலாம் இனிங்ஸிற்காக துடுப்பாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரையில் 4 விக்கெட்டுக்களை இழந்து 380 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முன்னதாக தமது முதலாம் இனிங்ஸில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 434 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதற்கமைய இலங்கை அணி சற்றுமுன்னர் வரையில் 56 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளதுடன் தொடர்ந்தும் விளையாடி வருகின்றது.
































