Nov 13, 2026 - 10:25 AM

மலையாள சினிமா இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சீன்.
சூர்யா ஹீரோவாக நடிக்க நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் என பலர் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக கடந்த நவம்பர் 6 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றிப் படமாக இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்யும் சூர்யாவின் சீன் படம் வெளியாகி 7 நாட்கள் ஆகிவிட்டது.
இந்த வருடத்தில் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை தொடர்ந்து சீன் படமும் சூர்யாவிற்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது.
தற்போது 7 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் இப்படம் 68 கோடி ரூபா வரையிலான கலெக்ஷனை செய்திருக்கிறது.

































