Nov 13, 2026 - 12:05 PM

அநுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய அருகே சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்பட்ட பகுதியை வர்த்தக சமூகத்திற்குத் தடை செய்து தொல்லியல் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பல தேரர்கள் குறித்த பிரதேசத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, தொல்லியல் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தற்போது அப்பகுதியின் எல்லைகள் குறிக்கப்பட்டு வருவதுடன், அந்தச் சுற்றிலும் அறிவிப்புப் பலகைகள் பொருத்தப்பட்டு அது பிரவேசிக்க முடியாத தடைசெய்யப்பட்ட வலயமாக மாற்றப்பட்டுள்ளது.
எவ்வாறியினும், தொல்லியல் திணைக்களத்தின் இந்த தீர்மானத்திற்கு வர்த்தக சமூகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்பகுதியில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தரப்பினருக்கும், சாசனத்திலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ராஜாங்கனயே சத்தாரதன உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையில் நேற்று (12) மோதல் ஒன்று வெடித்தது.
அந்த மோதலின் பின்னர், பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
































