Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மலையக மக்கள் ஜனாதிபதியை நம்பி இருக்கிறார்கள்!

மலையக மக்கள் ஜனாதிபதியை நம்பி இருக்கிறார்கள்!

புறக்கணிப்பதை  நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!

புறக்கணிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!

போராடி மீட்ட வனத்துறையினர்!

போராடி மீட்ட வனத்துறையினர்!

நுவரெலியாவில் கனமழை

நுவரெலியாவில் கனமழை

திரைப்படங்களில் மட்டுமா நீங்கள் ஹீரோ?

திரைப்படங்களில் மட்டுமா நீங்கள் ஹீரோ?

மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

அவதிப்பட்ட மாணவர்களும் பொதுமக்களும்!

அவதிப்பட்ட மாணவர்களும் பொதுமக்களும்!

கனடாவுக்கான பயணம் பயனுள்ளதாக அமைந்தது!

கனடாவுக்கான பயணம் பயனுள்ளதாக அமைந்தது!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்!

இலங்கை வான்வௌியில் புதிய புரட்சி

இலங்கை வான்வௌியில் புதிய புரட்சி

மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய பொலிஸார்

மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய பொலிஸார்

போக்குவரத்து முழுமையாகப் பாதிப்பு!

போக்குவரத்து முழுமையாகப் பாதிப்பு!

அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள்!

அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள்!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

    Mobitel Inner 1278

    சிஎஸ்கே அணி தற்போது ஸ்பின்னர் ஒருவரை மட்டுமே டிரேட் செய்ய முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது.


    சிவம் துபே, டிவால்ட் பிரெவிஸ் என்று எந்த நட்சத்திர வீரர்களையும் விட்டுக் கொடுக்க சிஎஸ்கே விரும்பவில்லை. இதனால் சாய் கிஷோர் மீது மட்டுமே சிஎஸ்கே நிர்வாகம் கண் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


    ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன் ஹர்திக் பாண்டியா டிரேட் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் அணியும், பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங்கை மும்பை அணியும் ஸ்வாப் செய்து கொண்டுள்ளன.


    ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய டிரேட் ஒப்பந்தமாக இது அமைந்துள்ளது.


    இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான், லக்னோ, கேகேஆர் மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகள் டிரேட் செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் சிஎஸ்கே அணியின் எதிர்பார்ப்பு சிறிய அளவில் தான் இருக்கிறது. உள்நாட்டு வீரர்களை விட்டுக் கொடுத்துவிட்டு, வேறொரு உள்நாட்டு வீரரை வாங்கும் வகையில் டிரேட் ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளது.


    அந்த வகையில் குஜராத் அணியிடம் சாய் கிஷோரை வாங்க சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குஜராத் அணியில் சாய் கிஷோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. இதனால் சாய் கிஷோர் அதிருப்தியில் உள்ளார். மறுபக்கம் சிஎஸ்கே அணியால் உர்வில் படேலுக்கு முறையாக வாய்ப்பு அளிக்க முடியவில்லை.


    இதனால் இரு தரப்பிலும் டிரேட் செய்ய பேச்சுகள் தொடர்கிறது. குஜராத் அணி நிர்வாகம் சாய் கிஷோரை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் சாய் கிஷோர் குஜராத் அணியில் இருந்து ரிலீஸ் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


    ரிலீஸ் செய்வதால், குஜராத் அணிக்கு எந்த லாபமும் இல்லை. இதனால் டிரேட்டில் வேறொரு வீரரை கைப்பற்ற குஜராத் அணி நிர்வாகம் ஆலோசிப்பதாக தெரிகிறது.


    ஒருவேளை சாய் கிஷோர் டிரேட் கைகூடவில்லை என்றால், ஐதராபாத் அணியின் சலீல் அரோரா அல்லது அனிகேத் வர்மா மீது சிஎஸ்கே நிர்வாகம் கண் வைத்துள்ளது. இருவருமே ஃபினிஷிங் ரோலில் ஆடக் கூடியவர்கள். லிவிங்ஸ்டனுக்கு பின் களமிறங்க ஒரு ஃபினிஷரின் தேவை சிஎஸ்கே அணிக்கு அவசியமாக உள்ளது. இதனால் இருவரில் ஒருவரை வாங்கவும் ஆர்வம் காட்டுகிறது.