Nov 19, 2026 - 02:50 PM

கொழும்பு, கொம்பனித்தெருவில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் இன்று (19) பிற்பகல் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தின் கீழ்தளத்தில் அமைந்துள்ள மத்திய குளிரூட்டல் (Central Air Conditioning) கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் சிறிய தீப்பரவல் காரணமாகவே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது நிலைமை முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீப்பரவலால் திணைக்களத்தின் அலுவலக நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அனைத்துப் பணிகளும் வழமைபோலத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

































