Nov 12, 2026 - 04:38 PM

சர்வதேச போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்காக பாராட்டுப் பரிசுக் கொடுப்பனவாக 100 மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய ஒலிம்பிக் மற்றும் உலக மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு தலா 100 மில்லியன் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதேநேரம் பொதுநலவாயப் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்காக 75 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
ஆசியத் தங்கப் பதக்கத்திற்காக ரூபாய் 50 மில்லியன்னும், சார்க் (SAARC) தங்கப் பதக்கத்திற்காக 15 மில்லியன் ரூபாய் வீதமும் வழங்கப்படும்.
அதற்கு அமைவான முறையில் அத்தொடர்களில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மற்றும் ஏனைய சர்வதேச போட்டிகளுக்காகவும் பாராட்டுப் பரிசுக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முழு விபரங்களை அறிய …
































