Nov 20, 2026 - 10:02 PM

பொரளை, டி.எஸ். சேனாநாயக்க சந்தியை அண்டிய வீதிப் பகுதியொன்றை இன்று (20) இரவு 10.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு கொழும்பு போக்குவரத்துப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வீதித் தடத்தில் அமைந்துள்ள கழிவுநீர் வடிகால் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள வழிந்தோடும் நிலையைச் சீர்செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை குறித்த வீதிப் பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
இதன் காரணமாக சாரதிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கக்கூடிய அசௌகரியங்களைக் குறைப்பதற்காக, பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்:
மாற்று வழிகள்:
வெலிக்கடை பக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் ஆயுர்வேத சந்தியிலிருந்து கோட்டா வீதிக்குப் பிரவேசித்து பொரளை நோக்கிப் பயணிக்க முடியும்.
அத்துடன், மொடல் பாம் (Model Farm) சந்தியிலிருந்து பழைய புல்லர்ஸ் வீதி (Old Bullers Road) ஊடாக மயான சுற்றுவட்டம் நோக்கிப் பயணிக்க முடியும்.
































