Nov 20, 2026 - 07:04 PM

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97 மேலதிக வாக்குகளால் இன்று (20) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கமைய நவம்பர் 13 ஆம் திகதி முதல் இன்றைய தினம் வரை 7 நாட்கள் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நாளை (21) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த சனிக்கிழமை உட்பட ஏனைய அனைத்து நாட்களிலும் மு.ப. 9.30 மணிக்கு வரவு செலவுத் திட்ட விவாதத்திற்காகப் பாராளுமன்றம் கூடவுள்ளது.
































