Nov 20, 2026 - 04:29 PM

இந்த ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இன்று (20) நாட்டை வந்தடைந்துள்ளார்.
ரஷ்ய நாட்டவரான இவருடன், அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிடுகையில், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் 20 இலட்சம் என்ற எல்லையைத் தாண்ட முடிந்துள்ளதாகவும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இதுவொரு விசேட வெற்றியாகும் எனவும் தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 2024, 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் இந்த 20 இலட்சம் என்ற எல்லை தாண்டப்பட்டுள்ளது.
பல்வேறு உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுற்றுலாத்துறை தனது முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாகப் பேணி வருவது, நாட்டின் சுற்றுலாத்துறை மீது காணப்படும் சர்வதேச நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகவும், 2025 ஆம் ஆண்டின் சுற்றுலாப் பயணிகளின் வருகை சாதனையை 2026 ஆம் ஆண்டில் முறியடிப்பதே எதிர்பார்ப்பாகும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
































