Nov 20, 2026 - 06:00 PM

நாட்டின் வயது வந்த மக்களின் உயிரியல் தரவுகளை இந்திய நிறுவனமொன்றிற்கு வழங்கி டிஜிட்டல் அடையாள அட்டைகளை விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளரான வசந்த முதலிகேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் இதில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
































