Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
ஜோதிடம்
ராகு கேது பெயர்ச்சி 2025!

Nov 22, 2024 - 09:21 PM

ராகு கேது பெயர்ச்சி 2025!
Mobitel Inner 1278

ஜோதிடத்தில் சர்ப்ப கிரகம், நிழல் கிரகம், பாவ கிரகம் என அழைக்கப்படக் கூடிய என ராகு மற்றும் கேது. இவை இரண்டும் எப்பொழுதும் எதிரெதிரான ராசிகளில் அமர்ந்து இருக்கும். கடிகாரத்திற்கு எதிர் திசையில் சுற்றுக் கூடிய இந்த ராசிகள் 2025 மே 18 ஆம் திகதி பெயர்ச்சியாக உள்ளனர்.

 

இந்த பெயர்ச்சியின் போது ராகு மீனத்தில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். பாவ கிரகங்களாக இருந்தாலும் இந்த கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் அமைப்பு காரணமாக சில ராசிகளுக்கு பலவிதத்தில் அற்புதமான பலனை தரக்கூடியதாக இருக்கும்.

 

மேஷ ராசி - நிதிநிலை மேம்படும்

 

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ராகு கேதுவின் பெயர்ச்சி காரணமாக மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கும். ராகு கும்ப ராசிக்கு மாறுவதால் உங்களின் நிதிநிலை திடீர் முன்னேற்றம் அடையும். உங்களின் செயல்பாடுகளில் குடும்பத்தினரின் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். சில விஷயங்களால் தடைப்பட்ட வேலைகளை திரும்பவும் எடுத்து செய்து முடிக்க முடியும்.

 

மிதுன ராசி: நல்ல செய்திகள் தேடி வரும்

 

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு ராகு மற்றும் கேதுவின் அமைப்பானது பலவிதத்தில் சாதகமானதாக இருக்கும். உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வருவதோடு, வீட்டில் சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். அன்றாட பணிகளில் போராட்டமான சூழ்நிலை இருந்தாலும், நீங்கள் நினைத்த விஷயத்தை அடைய முடியும். குறைந்த உழைப்பில் அதிக பலனை பெற வாய்ப்புள்ளது. வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்புள்ளது. வண்டி, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.

 

விருச்சிக ராசி: அதிர்ஷ்டம் தேடிவரும்

 

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு ராகு கேதுவின் பெயர்ச்சி காரணமாக பலவிதத்தில் உங்களுக்கு சாதக பலன்கள் உண்டாகும். உங்கள் செயலில் அதிர்ஷ்டம் துணை நிற்கும். வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி நடக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் செயலில் சென்ற போராட்டமான சூழ்நிலை இருந்தாலும் லாபம் அதிகமாக கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்பு உள்ளது. சொத்து தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனம் வாங்கும் விருப்பம் நிறைவேறும்.

 

மகர ராசி: கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்

 

ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி காரணமாக மகர ராசி சேர்ந்தவர்களுக்கு பலவிதத்தில் நன்மை கிடைக்கும். குறிப்பாக வேலையில் உங்கள் கடின உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும். 2025 ஆம் ஆண்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல விதத்தில் அதிர்ஷ்டமான சூழல் ஏற்படும். பணபலம் உண்டாகும். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. குடும்ப உறவு வழிபடும்.

 

மீன ராசி செழிப்பு அதிகரிக்கும்

 

மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சி காரணமாக பலவிதத்தில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். ராகு உங்கள் ராசியை விட்டு நீங்குவது நன்மை தரக்கூடியதாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு ஜென்ம சனி ஆரம்பிப்பதால் எந்த ஒரு செயலிலும் கூடுதல் கவனம் தேவை. புதிய தொழில், வேலை தொடங்குவதையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ற சாதக பலன்கள் உண்டாகும். எந்த ஒரு புதிய முதலீடு விஷயத்திலும் கவனம் தேவை.

 

கவனிக்க வேண்டிய விஷயங்கள்,

 

இங்கு குறிப்பிட்டுள்ள மேஷம், மீன ராசிக்கு ராகு கேது பலன் கிடைத்தாலும், ஏழரை சனி நடப்பதால் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கடினமான சூழ்நிலை இருந்தாலும் உங்களின் உழைப்பிற்கு மரியாதையும், பலனும் கிடைக்கும்.


MOST READ

காணொளி
மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

Mobitel 1278