Dec 28, 2024 - 04:54 PM -
0
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பிலான முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிபில பிரதேசத்தில் வைத்து அவர் கைதானதாக தெரியவருகிறது.
பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக வாக்குறுதியளித்து, 40 இலட்சம் ரூபா பணம் கேட்டு அதில் 30 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நாளை (29) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.