Header Logo
Mogo Academy

ஏனையவை
போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

Jan 31, 2025 - 11:51 AM -

0

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
Mobitel inner

புத்தளம் - கற்பிட்டி நகரில் நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது ஒருதொகை போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து வடமேற்கு கட்டளையின் விஜய நிறுவன கடற்படையினர் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது, கற்பிட்டி நகரில் பயணித்த சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டியொன்றை பரிசோதனை செய்தனர்.

இதன்போது குறித்த முச்சக்கரவண்டியில் மிகவும் சூட்சகமான முறையில் விற்பனை செய்யும் நோக்கில் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் 800 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி - புதுக்குடியிருப்பு மற்றும் ஏத்தாளை பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 49 வயதுடையவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் அவர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

--

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara