Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவன்

Jan 24, 2025 - 11:19 AM

சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவன்
Mobitel Inner 1278

மாத்தளை, கலாதுவெல பகுதியில் வசித்து வரும் தினேஸ்ராஜ் மற்றும் ஷெரின் போன்றோரின் 8 வயது மகனான நிஷ்விக் மாத்தளையில் இயங்கி வரும் எஸ்.ஐ.பி அபாகஸ் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கற்று வருகிறார்.

 

தொடர் பயிற்சியின் காரணமாக கணக்கிடுவதில் இவருக்கிருந்த வேகத்தினை கவனித்த இவரது ஆசிரியர்களான சங்கரப்பிரியா மற்றும் சுரேந்திரன் போன்றோர் இவரது திறமையை உலக சாதனைமாகப் பதிவு செய்ய முடிவெடுத்தனர். இதற்கான நிகழ்வு கொழும்பு ஜயா மாவத்தையில் வைத்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 

இதன்போது மாணவன் நிஷ்விக் மூன்று மற்றும் இரண்டு எண்களை ஒரு எண்ணினால் பெருக்கியும் மூன்று எண்களை ஒரு எண்ணால் வகுத்தும் 3 நிமிடங்களில் 180 கணக்குகளுக்கு சரியான விடையளித்தார். இவரது முயற்சியை முறைப்படி கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா மற்றும் பீப்பிள் ஹெல்பிங் பீப்பள் பவுண்டேஷனின் இயக்குநர் க்ளோரன்ஸ் சாமூவேல் போன்றோர் உலக சாதனையாக உறுதி செய்து சாதனை மாணவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், பதக்கம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்கள்.

 

சோழன் உலக சாதனை படைத்த இளம் கணித மேதைக்கு எஸ்.ஐ.பி. அபாகஸ் பயிற்சி மையத்தின் நிர்வாகத் தலைவர்கள் பரிகளித்துப் பாராட்டினார்கள். SIP அபகஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்தவர்களும் சோழன் உலக சாதனை படைத்த மாணவனை வாழ்த்திப் பாராட்டினார்கள்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278