Header Logo
Mogo Academy

ஏனையவை
புத்தளத்தில் மஞ்சள், ஏலக்காய் மீட்பு

Jan 25, 2025 - 03:50 PM -

0

புத்தளத்தில் மஞ்சள், ஏலக்காய் மீட்பு
Mobitel inner

புத்தளம் கற்பிட்டி, கீரிமுந்தல் மற்றும் துறையடி ஆகிய கடற்பிரதேசங்களில் இருந்து ஒருகொகை மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (24) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

வடமேற்கு கட்டளையின் விஜய நிறுவன கடற்படையினர் நேற்று கற்பிட்டி கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில் முன்னெடுத்த விஷேட சோதனை நடவடிக்கையின் போது, இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஏலக்கா 8 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 240 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இதனையடுத்து, கற்பிட்டி - துறையடி கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட டிங்கி இயந்திர படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்டனர்.

 

இதன்போது, குறித்த டிங்கி இயந்திர படகில்  இருந்து 40 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 1,231 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 3 பொதிகளில் அடைக்கப்பட்ட 102 கிலோ கிராம் ஏலக்காய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 23 மற்றும் 48 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கற்பிட்டி, ஆணவாசல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

 

இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் , ஏலக்காய் மற்றும் டிங்கி இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.

--


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara