Header Logo
Mogo Academy

ஏனையவை
கேரளக் கஞ்சாவுடன் பெண் கைது

Jan 26, 2025 - 12:45 PM -

0

கேரளக் கஞ்சாவுடன் பெண் கைது
Mobitel inner

புத்தளம் , மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னப்பாடு பகுதியில் கேரளக் கஞ்சாவுடன் இளம் பெண்ணொருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சின்னப்பாடு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

வடமேல் கடற்படையின் தம்பபண்ணி கடற்படையினருடன் இணைந்து, புத்தளம் பிரதேச குற்ற விசாரணை பிரிவினர் இணைந்து நேற்று சந்தேகத்திற்கிடமான வீடொன்றினை பரிசோதனை செய்தனர்.

இதன்போது, குறித்த வீட்டில் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளக் கஞ்சா 2 கிலோ 245 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா 8 இலட்சம் ரூபா என பெறுமதியென மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மதுரங்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

--

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara