Header Logo

மலையகம்
மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு!

Jan 30, 2025 - 03:15 PM -

0

மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு!

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

மாவை சேனாதிராஜா தனது 19 வயதில் அரசியல் பயணத்தை தொடங்கி 83 வயதுவரை முழுநேர அரசியல் தலைவராக தமிழ் மக்களுக்காக பணியாற்றியுள்ளார்.

 

போருக்கு முன்னரும் பின்னரும் என இவரது அரசியல் நகர்வுகள் பல்வேறு பரிணாமங்களை கொண்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட காலத்திலும் இவரது பணி காத்திரமாக இருந்தது.

 

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து போராடி சிறைவாசமும் அனுபவித்தவர் மாவை சேனாதிராஜா. 


அன்னாரின் இழப்பு தமிழர்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும்.

 

இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் மிகநெருங்கிய உறவு இருந்தது. சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலம் முதல் இந்த உறவு தொடர்ந்தது. மலையக தமிழ் மக்களுக்காக இ.தொ.காவுடன் இணைந்து அவர் பல சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்துள்ளார்.

 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும் உறவுகளுக்கும் மக்களுக்கும் இ.தொ.கா சார்பாக தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர் விட்டுச்சென்ற பணிகளை தமிழரசு கட்சி தொடர வேண்டும் என செந்தில் தொண்டமான் தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title