Header Logo
SLIC
உலகம்
தெற்கு சூடானில் விமான விபத்து: 14 பேர் உயிரிழப்பு

Apr 28, 2026 - 06:55 AM

 தெற்கு சூடானில் விமான விபத்து: 14 பேர் உயிரிழப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவிற்கு அருகில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 14 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (SSCAA) தெரிவித்துள்ளது. 

மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களிலேயே அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

உயிரிழந்தவர்களில் விமானியும் 13 பயணிகளும் அடங்குவர். பயணிகளில் 12 பேர் சூடான் நாட்டவர்கள் என்றும், இருவர் கென்ய நாட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

2011 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னரான ஒரு தசாப்த காலப்பகுதியில், சூடானில் 55-க்கும் மேற்பட்ட விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதோடு, அதன் விளைவாகப் பல உயிர்கள் பலியாகியுள்ளன. 

இதற்கு முன்னர், 2015 நவம்பரில் ஜூபா விமான நிலையத்திற்கு அருகில் அன்டனோவ் (Antonov) விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழந்தமையே மிக மோசமான விமான விபத்தாகக் கருதப்படுகிறது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278