Header Logo
SLIC
பல்சுவை
இந்த தொலைபேசிகளில் இனி வாட்ஸ் அப் இயங்காது!

Apr 27, 2026 - 06:26 PM

இந்த தொலைபேசிகளில் இனி வாட்ஸ் அப் இயங்காது!
Mobitel Inner 1278
EDEX Inner

ஆண்ட்ராய்டு 6.0 இற்கு குறைவான இயங்குதளம் கொண்ட தொலைபேசிகளில் இனி வாட்ஸ் அப் செயல்படாது என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது ஆண்ட்ராய்டின் முந்தைய பதிப்புகளான ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 பதிப்புகளில் இயங்கும் தொலைபேசிகளில் இனி வாட்ஸ்அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 8 முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை (உதாரணமாக AI வசதிகள்) வழங்க பழைய மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் போதுமானதாக இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பயனர்களுக்கு ஏற்கனவே இதுதொடர்பாக எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு விட்டதாகவும் மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான உரையாடல்கள் மற்றும் மீடியா கோப்புகளை இழப்பதைத் தவிர்க்க, பயனர்கள் தங்கள் அரட்டைகளை பேக்கப் செய்துகொள்ளுமாறும் மெட்டா கூறியுள்ளது. 

மெட்டாவின் இந்த அறிவிப்பால் ஆண்ட்ராய்டு 6.0 அல்லது அதற்கு மேலான பதிப்பிற்கு மாற முடியாத பழைய போன் வைத்திருப்பவர்கள், வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயன்படுத்த புதிய சாதனத்திற்கு மாற வேண்டியிருக்கும். 

இது வாட்ஸ்அப் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் பிசினஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278