Header Logo
Mogo Academy

ஏனையவை
மது போதையில் வர்த்தக நிலையத்தில் அட்டகாசம் புரிந்த மதகுரு கைது

Jan 31, 2025 - 11:55 AM -

0

மது போதையில் வர்த்தக நிலையத்தில் அட்டகாசம் புரிந்த மதகுரு கைது
Mobitel inner

வவுனியா, புகையிரத வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் அட்டகாசம் செய்த இந்து மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (30) தெரிவித்தனர்.

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் மது போதையில் நேற்று இரவு 9.30 மணியளவில் சென்ற இந்து மதகுரு ஒருவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதுடன், அருகில் இருந்த தொலைகாட்சி திருத்துமிடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பழைய தொலைக் காட்சி பெட்டிகளையும் சேதப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் வீதியில் சென்றோர் குறித்த மதகுருவை மடக்கிப்பிடித்து வைத்திருந்ததுடன் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த இந்து மதகுவை கைது செய்ததுடன், வவுனியா பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின் இன்று (30) பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  
 
--

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara