Header Logo

மலையகம்
நானுஓயா - பதுளை இடையிலான புதிய ரயில் சேவை ஆரம்பம்

Feb 10, 2025 - 11:46 AM -

0

நானுஓயா - பதுளை இடையிலான புதிய ரயில் சேவை ஆரம்பம்

நானுஓயா ரயில் மற்றும் பதுளை நிலையங்களுக்கு இடையிலான 'எல்ல ஒடிசி நானுஓயா' என்ற புதிய ரயில் சேவை இன்று (10) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நானுஓயா புகையிரத நிலைய வளாகத்தில் இடம்பெற்ற விஷேட சமய வழிபாட்டு நிகழ்வின் பின்னர் தம்மிக ஜயசுந்தர தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பயணிகளின் சுற்றுலாப் தேவையின் அடிப்படையில் இந்த தொடருந்து சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த தொடருந்து செவ்வாய்க்கிழமையை  தவிர வாரத்தின் ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 8.10 இற்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும் பிற்பகல் ஒரு மணிக்கு பதுளையிலிருந்து கண்டிக்கும் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

முதல் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 7,000 ரூபாவும் இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 6,000 ரூபாவும் மூன்றாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 5,000 ரூபாவும் பெற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த ரயில் சேவையினை பாராட்டி நானுஓயா ரயில் நிலையத்தில்  ரயில் பெருளமளவான வெளிநாட்டு ,உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் , சுற்றுலா பயணிகள் வழிகாட்டிகள் மற்றும்  பொதுமக்கள் நின்று இந்த ரயில் சேவையைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

--

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!