Header Logo

செய்திகள்
எரிபொருள் விலை குறையுமா?

Jun 20, 2026 - 11:36 PM -

0

எரிபொருள் விலை குறையுமா?

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின், எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் அதன் சலுகைகளை நாட்டு மக்களுக்கு வழங்க முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விற்பனை மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலைமை குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; தற்போதைய சூழலிலும் அரசாங்கம் ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் சுமார் 100 ரூபாவையும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு சுமார் 20 ரூபாவையும் மானியமாக மக்களுக்கு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

எரிபொருள் கொள்வனவு என்பது சாதாரண சந்தையில் பொருட்களை வாங்குவதைப் போன்றதல்ல என்றும், அது முறையான டெண்டர் நடைமுறைகளின்படி ஒப்புக் கொள்ளப்பட்ட விலையிலேயே கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க:

"இப்போதும் அரசாங்கம் ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் 100 ரூபா மானியத்தையும், பெற்றோலுக்கு 20 ரூபா வரையிலும் வழங்கி வருகின்றது. கடையிலிருந்து ஒரு பொருளை வாங்குவது போல எரிபொருளை உடனடியாக வாங்கிவிட முடியாது. முன்கூட்டியே டெண்டர் கோரப்பட்டு, அந்த டெண்டர்களின்படியே ஒப்புக் கொள்ளப்பட்ட விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.

எனினும், இதே நிலைமை நீடித்தால் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் மக்களுக்கு ஒரு சலுகையை வழங்க முடியும் என நாம் நம்புகிறோம். நாட்டின் பொருளாதாரத்திற்கும் அது அவசியமாகும். பொருளாதாரத்தின் மேல் மட்டத்தை நாம் கட்டியெழுப்பியிருப்பதனாலேயே இவை அனைத்தையும் செய்ய முடிந்துள்ளது. எரிபொருள் மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை. எங்களால் முடிந்தவரை விரைவில் எரிபொருள் விலையைக் குறைக்குமாறு நாமும் கோரியுள்ளோம்" என்றார்.

MOST READ

காணொளி
செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்