Jun 18, 2026 - 02:10 PM -
0
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சியாமந்தா கிரண். இவர் சரவணன் மீனாட்சி, தென்றல் வந்து என்னை தொடும், அமுதாவும் அன்னலட்சுமியும் , அண்ணா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை சியாமந்தா கிரண் பிரபல சின்னத்திரை நடிகர் ஆனந்த செல்வன் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுடைய திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர்.
நடிகர் ஆனந்த செல்வன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அயலி சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சியாமந்தா கிரண் - ஆனந்த செல்வன் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை இந்த ஜோடிக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

