Header Logo
Mogo Academy

சினிமா
மீண்டும் ஒரு இளம் நடிகை தற்கொலை!

Jun 15, 2026 - 04:47 PM -

0

மீண்டும் ஒரு இளம் நடிகை தற்கொலை!
Mobitel inner

பிரபல இந்தி தொலைக்காட்சித் தொடர்களான 'கும்மும் பாக்யா', 'வாக்லே கி துனியா' ஆகியவற்றில் நடித்து புகழ்பெற்ற 22 வயது இளம் நடிகை சஞ்சிதா உகலே, தற்கொலை செய்து கொண்டார். 

இந்தச் சம்பவம் இந்தி சின்னத்திரை உலகினரிடமும் அவரது ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை நாலாசோபரா கிழக்கு பகுதியில் உள்ள சாய் சந்தோஷி கட்டிடத்தில் நடிகை சஞ்சிதா உகலே வசித்து வந்தார். 

நேற்று (14) மாலை 7.00 மணி முதல் 7.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், அவர் தனது படுக்கையறையை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு, சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அச்சோல் பொலிஸ் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் பாக் தெரிவித்துள்ளார். 

உடனடியாக அவரது குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு வசாய் - விரார் நகராட்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். 

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொலிஸார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். சஞ்சிதாவின் தந்தை மச்சிந்திர உகலே அளித்த புகாரின் அடிப்படையில், அச்சோல் பொலிஸார், இன்று (15) பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 194-ன் கீழ் விபத்து மரண வழக்காக பதிவு செய்துள்ளனர். 

தற்கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஜீ டிவியின் மிக நீண்ட தொடரான 'கும்மும் பாக்யா'வில் 'தியா தாண்டன்' என்ற கதாபாத்திரத்திலும், 'வாக்லே கி துனியா' தொடரில் 'ருசிதா ஜெய்ட்லி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துப் பிரபலமானார். டங்கல் டிவியின் 'தில்வாலி துல்ஹா லே ஜாயேகி' தொடரில் கதாநாயகியாக நடித்தார். 

விக்கி கௌஷல் நடித்துள்ள ‘சாவா’ திரைப்படத்தில் இளம் வயது தாரா ராணி கதாபாத்திரத்திலும், மனோஜ் பாஜ்பாய் நடித்த ‘சைலன்ஸ் 2’ படத்திலும் நடித்துள்ளார்.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara