Header Logo
Mogo Academy

ஏனையவை
புத்தளத்தில் பெருந்தொகையான இஞ்சியுடன் மூவர் கைது

Feb 17, 2025 - 02:57 PM -

0

புத்தளத்தில் பெருந்தொகையான இஞ்சியுடன் மூவர் கைது
Mobitel inner

புத்தளம், கற்பிட்டி - தளுவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை காய்ந்த இஞ்சி மூடைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கடந்த 11 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான புத்தளம் - தம்பபன்னி நிறுவன கடற்படையினர் கற்பிட்டி -  தளுவ பிரதேசத்தில் கடந்த 11 ஆம் திகதி இரவு விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது, சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்றை கடற்படையினர் சோதனையிடப்பட்டனர்.

குறித்த கெப் வண்டியில், 32 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் 1,158 கிலோ 60 கிராம் உலர்ந்த இஞ்சியும், 45 கிலோ கிராம் கருவாடும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் மற்றும் மணல்தோட்டம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி, உலர்ந்த கருவாடு மற்றும் கெப் வண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

--

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara