Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம் - நேரலை

Feb 18, 2025 - 11:16 AM

வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம் - நேரலை
Mobitel Inner 1278

 

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிகழ்த்தி வருகிறார்.

 

“எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தை முன்வைப்பதில் மகிழ்ச்சி…”

 

“எமக்கு எதிராக தவறான பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டாலும் சர்வதேச தரப்பினருடன் வலுவான தொடர்புகளை பேணி முதலீட்டாளர்களுடன் நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும் நாம் வெற்றிப் பெற்றுள்ளோம்.”

 

“கடனை மீள செலுத்துவதற்கு 2028 ஆம் ஆண்டு வரை காலவகாசம் உள்ளது. இதனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அத்துடன் கடன் செலுத்தும் தரப்படுத்தலை அதிரிக்க வேண்டும்”

 

"2020 ஆம் ஆண்டில் பணவீக்கம் 70 சதவீதம் வரை அதிகரித்தது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது…"

 

"2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்."

 

“நெருக்கடியைக் குறைப்பதற்கான சில நடவடிக்கைகள், குறிப்பாக செலவின் அடிப்படையில் எரிசக்தி விலைகளை சரிசெய்தல், வரிகளும் வட்டி வீதங்களும் அதிகரிப்பது குடிமக்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.”

 

“சர்வதேச நாணய நிதியத்தின் பங்கை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் நமது சொந்த பொருளாதார நிகழ்ச்சி நிரலை அமைக்க பொருளாதார இறையாண்மை அவசியம் என்பதை நாங்கள் உணர்கிறோம்.”

 

"நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, ​​பொதுக் கடனை மறுசீரமைப்பதில் ஈடுபட்டிருந்தோம், அதை மாற்றுவது நாட்டை ஸ்திரமின்மைக்கு ஆளாக்கும் என்பதால் அதை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை...."

 

சம்பிரதாய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து வௌியேறி முன்னுரிமை இனங்காணப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்த வரவு செலவு திட்டம் இதுவாகும்."

 

“தேசிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான வரவு செலவு திட்டமே இது. கைத்தொழிற்துறை , சேவை, விவசாயம் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். அதற்காக பொது மக்களின் உதவிகள் அவசியம். அத்தியாவசிய பொருட்கள் சேவையை சாதாரண விலைக்கும் தரமாகவும் தொடர்ந்து வழங்க முறைமையொன்று.”

 

“இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு வரலாற்றில் முதன்முறையாக அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”

 

"வரையறுக்கப்பட்ட வரி நிதிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க முறைமை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது."

 

"பொருளாதாரத்தில் அதிக ஜனநாயகமயமாக்கல் தேவை."

 

"பொருளாதாரத்தின் அனைத்து நன்மைகளும் பொருளாதார செயல்முறைக்கு பங்களிக்கப்படுகின்றன."

 

"உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வரவு செலவு திட்டம்."

 

"நிதி ஒழுக்கம் மற்றும் பொருளாதார தொலைநோக்குப் பார்வையுடன் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டம்."

 

"ஊழல் மற்றும் விரயத்தை குறைத்து, கூட்டு ஒழுக்கத்தின் மூலம் ஒரு புதிய பயணத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் முறைமை ஒன்றை நாங்கள் உருவாக்கி வருகிறோம்."

 

"மக்களின் பொருளாதார உரிமைகளை உறுதி செய்வதே இந்த வரவு செலவு திட்டத்தின் தத்துவம்"

 

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைக்கிறேன்…

 

*தற்போது உள்ள சுங்க சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு புதிய சுங்க சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

 

* வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை வணிக ஒத்துழைப்புக்குப் பயன்படுத்தவுள்ளோம்.

 

* முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதிகளை வழங்குதல்

 

* பசுமை தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த நடவடிக்கை.

 

* பொருளாதார சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை.

 

*அரசுக்குச் சொந்தமான நிலங்கள் உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு விடப்படும்.

 

* நாட்டில் வர்த்தகம் செய்வதற்கான வசதியை மேம்படுத்துவோம்.

 

* வங்குரோத்து நிலை குறித்த சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்..

 

* பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கான ஒப்புதல்களுடன் 'அனைத்து சேவைகளும் ஒரே இடத்திலிருந்து' என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

* பொது-தனியார் கூட்டாண்மை தொடர்பான புதிய சட்டம்.

 

*நில உரிமைகளை மேம்படுத்தவும், நிலங்களின் வணிகமயமாக்கலை அதிகரிக்கவும் 'பிம் சவிய' வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும்.

 

*இலங்கையின் கனிம வள முதலீடு, தொழில்துறை அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய துறைகளில் இலங்கையின் பயன்படுத்தப்படாத திறனை நிர்வகிக்க அரசாங்கம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை நாடுகிறது.

 

*தர ஆய்வு மற்றும் சான்றிதழ் செயல்முறைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி ஆதரவை அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குகிறது.

 

*வெளிநாட்டு வருமானம் மற்றும் ஈவுத்தொகையை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஒரு புதிய முறை.

 

*சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வக பரிந்துரை மையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை திறம்பட வழங்குவதற்காக, நாட்டில் தேசிய முகாமைத்துவ தரவு அமைப்பின் முடிவுகளை அடைய 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

 

*டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த 3,000 ரூபாய் மில்லியன் ஒதுக்கீடு.

 

*பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன 'Permit' ம் கிடைக்காது… இந்த வருடம் வாகனமும் கிடைக்காது...

 

*"கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும், இதற்காக ஏற்கனவே 7500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

  

*திரிபோஷ வேலைத்திட்டம் நிறுத்தப்படாது...

 

*திரிபோஷ வேலைத்திட்டத்திற்காக 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு… 

 

* யாழ் நூலகத்திற்கு கணினி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை பெற்றுக் கொடுக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு..

 

* தோட்டப் புறங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மனித வளம், தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும்...

 

சுகாதார துறை

 

*2025 ஆம் ஆண்டு சுகாதார துறைக்கு 604 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு..

 

*இதில் மருந்து வழங்கல் மற்றும் சுகாதார வழங்கலை உறுதிப்படுத்துவதற்காக 185 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

 

*மருத்து தட்டுப்பாடு ஏற்பட எவ்வித வாய்ப்புகளும் இல்லை...

 

சுற்றுலாத் துறை

 

*சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 500 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

 

*சுற்றுலாத் துறையை மேம்படுத்த டிஜிட்டல் டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும்.

 

*கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஸ்கேனிங் அமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு...

 

கொழும்பு துறைமுக கொள்கலன் நெரிசலை குறைக்க வேயங்கொடையில் உள்நாட்டு கொள்கலன் முற்றம் ஒன்று நிறுவப்படும்...

 

இதற்காக  500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு...

 

*டிஜிட்டல் பொருளாதார அதிகார சபை ஒன்றை நிறுவ நடவடிக்கை ...

 

*டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளுக்கான புதிய சட்ட அமைப்பு ஒன்று.

 

* வருடாந்த தகவல் தொழில்நுட்ப வருமானத்தை 5 பில்லியன் அ.டொலர்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

 

* முதியோர் கொடுப்பனவு 5 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிப்பு...

 

* சிறுநீரக கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிப்பு…

 

*பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்..

 

*அதில் 2,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும்... மீதி 3,000 ரூபாய் அவர்களில் சட்டரீதியான பாதுகாவலருக்கு வழங்கப்படும்...

 

*இதற்காக 2025 வரவு செலவு திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு....

 

*இந்த பிள்ளைகள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படும்...

 

*அதற்காக 2025 வரவு செலவு திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது...

 

*முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை நிர்மாணிப்பதற்காக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு...

 

மலையகம்

 

*மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 7,583 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு...

 

*தோட்ட வீட்டு அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திற்காக 4,268 மில்லியன் ரூபாவும், மலையக தமிழ் இளைஞர்களில் தொழிற்பயிற்சி உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 2,450 மில்லியன் ரூபாவும் மற்றும் மலையக பாடசாலைகளின் மற்றும் டிஜிட்டல் வகுப்பறை அபிவிருத்திக்காக 866 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு…

 

* குறைந்த வருமானம் பெறும் தரம் 5 மாணவர்களுக்கான கொடுப்பனவை 750 ரூபாயிலிருந்து  1,500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

* விளையாட்டு பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர போசாக்கு உணவு உதவித்தொகை 5,000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக ஆக உயர்த்தப்படும்.

 

* தொழில்கல்வி பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை 4,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக உயர்த்தப்படும். இதற்காக ரூ.200 மில்லியன் ஒதுக்கப்படும்.

 

* மகாபொல புலமைப்பரிசில் 5,000 ரூபாவிலிருந்து 7,500 ரூபாவாக உயர்த்தப்படும், அதே நேரத்தில் புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் 4,000 ரூபாவிலிருந்து  6,500 ரூபாவாக உயர்த்தப்படும். இதற்காக 4,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவுகள் ஏப்ரல் முதல் வழங்கப்படும்.

 

*திருகோணமலையில் மீதமுள்ள 61 எண்ணெய் தொட்டிகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எண்ணெய் தொட்டிகளைப் பயன்படுத்தி மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்."


*அதற்காக  சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்ற நடவடிக்கை..

 

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு…

 

* அரச ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 வரை 15,750 ரூபாவால் அதிகரிக்கப்படும்…

 

* சம்பள அதிகரிப்பிற்கு மேலதிகமாக வருடாந்த சம்பள அதிகரிப்பு 80 சதவீதத்தால் அதிகரிக்கப்படும்…

 

* அதன்படி, 250 ரூபாய் என்ற குறைந்தபட்ச வருடாந்த சம்பள அதிகரிப்பு 450 ரூபாய் வரை அதிகரிக்கப்படும்... 900 ரூபாய் என்ற சம்பள அதிகரிப்பு 900 ரூபாய் வரை அதிகரிக்கப்படும்...

 

* இந்த சம்பள அதிகரிப்பை கட்டம் கட்டமாக செயற்படுத்த முன்மொழியப்படுகிறது.

 

* முதல் கட்டமாக 5,000 ரூபாய் ஆரம்ப நிகர சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும்..

 

* இரண்டாவது கட்டமாக 2026 ஏப்ரல் மாதம் முதல் 30 சதவீதம் அதிகரிக்கப்படும்...

 

* மூன்றாம் கட்டமாக எதிர்வரும் 2026 ஆம் ஆண்டும் மற்றும் 2027 ஆம் ஆண்டும் ஜனவரி மாதங்களில் 70 சதவீதம் சமமான சதவீமாக அதிகரிக்கப்படும்... 

 

* அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட சம்பள அதிகரிப்பிற்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய எதிர்ப்பார்க்கபடுகிறது.

 

* இதேவேளை, அரச துறையில் உள்ள அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 

* இதற்காக, 2025 ஆம் ஆண்டில்10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்...
 

தனியார் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு…

 

தனியார் ஊழியர்களுக்கான தற்போது காணப்படும் 21,000 ரூபாய் என்ற குறைந்தபட்ச சம்பளத்தை 2025 ஏப்ரல் முதல் 27,000 ரூபாவாகவும் 2026 ஆண்டு முதல் 30,000 ரூபாவாகவும் அதிகரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது…

 

* தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது முன்மொழியப்பட்டுள்ள 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உறுதியளிக்கிறது.

 

*  01.01.2020 க்கு முன்னர் ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியங்கள், பொது நிர்வாக சுற்றறிக்கை எண் 1 இன் படி, 2020 ஆம் ஆண்டுக்கு பொருந்தக்கூடிய சம்பள அளவுகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக திருத்தப்படும்…

 

ஜனாதிபதியின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை நிறைவு…

 

 

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் முன்வைக்கிறார்.​

இதன் நேரடி ஔிபரப்பை டி.வி தெரண மற்றும் அத தெரண 24யில் தற்போது காணலாம். 

காலை 10.30 முதல், வரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு) - நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் முன்வைக்கப்படும். 

வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் பாராளுமன்ற அமர்வு பி.ப. 2.00 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். 

அதன் பின்னர் பி.ப. 2.00 - பி.ப. 7.00 மணி வரை உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

Mobitel 1278