சினிமா
யாழ்ப்பாணத்தில் பராசத்தி படப்பிடிப்பு

Mar 7, 2025 - 06:05 PM -

0

யாழ்ப்பாணத்தில் பராசத்தி படப்பிடிப்பு

அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளது.

 

இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் இந்தி திணிப்பு எதிர்ப்பை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம்தான் பராசக்தி.

 

நடிகர் ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்க, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு,

 

தமிழ்நாட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்காக, அடுத்த வாரம் படக்குழு இலங்கை செல்கின்றனர். அங்கு, யாழ்ப்பாணம் நூலகம் எரிந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமான காட்சிகளை எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.  

Comments
0

MOST READ
01
02
03
04
05