Header Logo

பல்சுவை
சீன இன்ஃபூளூயன்ஸர் உயிரிழப்பு!

Mar 15, 2025 - 04:35 PM -

0

சீன இன்ஃபூளூயன்ஸர் உயிரிழப்பு!

மூன்று வருடங்களாக பெய்ஜிங்கில் தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் வாடகையை செலுத்த முடியாமல் இருப்பதாகவும், கொஞ்ச நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், பணக் கஷ்டத்தால் நிறைய சிரமப்படுவதாகவும் அவர் பேசியதாக செய்தியாளர்களிடம் சிலர் தெரிவித்தனர்.

 

மாயோயூயூ என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் காஸ்ப்ளே (காமிக்ஸ், கதைகள், அனிமே போன்றவற்றில் வரும் பாத்திரங்களின் வேடமணிவது) இன்ஃபூளூயன்ஸரான ஷி யே, நிதி நெருக்கடி மற்றும் மன அழுத்தம் காரணமாக தன்னால் ஒழுங்காக சாப்பிட முடியவில்லை என்று பகிர்ந்து கொண்ட பிறகு இறந்து போனார்.

 

இவருக்கு வயது 24. மாயோயூயூ அனிமே சமூகத்தின் நேசத்துக்குரிய உறுப்பினர்களில் ஒருவர் என்று சீன பத்திரிக்கைகள் கூறியுள்ளது. பிப்ரவரி 25 அன்று இவரது மரணத்தை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

 

'இன்றும் அவரை பலர் விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே நாங்கள் அவரது தொலைபேசி இலக்கத்தையோ அல்லது அவரது சமூக ஊடகக் கணக்குகளையோ ரத்து செய்யப் போவதில்லை. அதற்கு பதிலாக, அவரது ரசிகர்களால் ஷி யே எவ்வளவு மிஸ் செய்யப்படுகிறார் என்பதை வெளிப்படுத்த, அவரது சோசியல் மீடியா கணக்குகளை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வைத்திருக்கப் போகிறோம்,' என்று அவரது குடும்பத்தினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

 

பிப்ரவரி 24 அன்று, அதாவது அவர் இறப்பதற்கு சரியாக ஒரு நாள் முன்பு, மாயோயூயூ ஒரு நேரடி ஒளிபரப்பை தொகுத்து வழங்கினார். அதில் அவர் தனக்குப் பிடித்த அனிமே கதாபாத்திரம் ஒன்றின் உடையை அணிந்திருந்தார்.

 

அந்த ஒளிபரப்பின் போது, ​​பார்வையாளர்கள் அவர் உணர்ச்சி ரீதியாக சோர்வடைந்த நிலையில் காணப்பட்டதையும், தனது மன ஆரோக்கியம் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டதையும் கவனித்ததாக கருத்துக்களை பகிர்ந்தனர்.

 

மூன்று வருடங்களாக பெய்ஜிங்கில் தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் வாடகையை செலுத்த முடியாமல் இருப்பதாகவும், கொஞ்ச நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், பணக் கஷ்டத்தால் நிறைய சிரமப்படுவதாகவும் அவர் பேசியதாக செய்தியாளர்களிடம் சிலர் தெரிவித்தனர்.

 

அதுமட்டுமின்றி இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருப்பதாகவும், பசி எடுக்கும் உணர்வே தனக்கு இல்லை என்றும் மாயோயூ பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்காக மருத்துவ உதவி பெற முயற்சித்த போதிலும், மருத்துவமனைக்குச் செல்வதற்கான முன்பதிவை அவரால் செய்ய முடியவில்லை என்றும் சீனப் பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை வெளியாகிள்ளது.

 

இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, 'இனி நாம் மீண்டும் ஒருபோதும் சந்திக்க மாட்டோம்" என்று எழுதப்பட்ட ஒரு சமூக ஊடகப் பதிவைமாயோயூயூ பகிர்ந்து கொண்டுள்ளார். அதை இப்போது பலர் அவரது பிரியாவிடை செய்தியாக பார்க்கிறார்கள். இதில் சோகம் என்னவென்றால், அவர் இறந்த நேரம், மாலை 5.20 மணி. இது அவரது பிறந்த தேதியான மே 20-ஐ பிரதிபலிப்பதாகவும், இது மெய் சிலிர்க்க வைக்கும் தற்செயல் நிகழ்வாக தாங்கள் உணர்ந்ததாகவும் அவரது ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

சீனாவின் காஸ்ப்ளே சமூகத்தில் மாயோயூ ஒரு முக்கிய நபராக இருந்தார். அனிமே மாநாடுகளில் தீவிரமாக பங்கேற்று, தனது காஸ்ப்ளே உள்ளடக்கத்தை சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிர்ந்து கொண்டார். சீன சமூக ஊடக தளத்தில் இவருக்கு 51,000 ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title