செய்திகள்
அர்ச்சுனாவுக்கு தற்காலிக தடை - சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

Mar 19, 2025 - 09:49 AM -

0

அர்ச்சுனாவுக்கு தற்காலிக தடை  - சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வௌியிடும் கருத்துக்களை ஓடியோ, வீடியோ வடிவில் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவ்வப்போது தெரிவிக்கும் அவமதிக்கும், அநாகரீகமான மற்றும் இழிவான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். 

அதன்படி, நாளை (20) முதல் மே 8 ஆம் திகதி வரை நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனா தெரிவிக்கும் கருத்துக்கள் ஔிபரப்பப்படமாட்டாது. 

குறித்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் நடத்தையின் அடிப்படையில் இந்தத் தற்காலிக தடை, நீக்கம் நீக்கப்படுமா? இல்லையா? என்பது பரிசீலிக்கப்படும் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05