பல்சுவை
இன்றைய தங்கவிலையின் நிலவரம்

Mar 19, 2025 - 10:45 AM -

0

இன்றைய தங்கவிலையின் நிலவரம்

இந்தியாவில் தங்கம் விலை கடந்த 14 ஆம் திகதி வரை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து, கடந்த 14 ஆம் திகதி இதுவரை இல்லாத உச்சமாக 66,400 ரூபாவை அடைந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 1,440 ரூபா அதிகரித்திருந்தது.

 

அதனைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் நேற்று (18) மீண்டும் உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 8,210 ரூபாவுக்கும், ஒரு சவரன் 65,680 ரூபாக்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு 40 ரூபாக்கும் ஆம், சவரனுக்கு 320 ரூபாவுக்கும் உயர்ந்து, ஒரு கிராம் 8,250 ரூபாவுக்கும், ஒரு சவரன் ரூ.66,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,290 ரூபாவுக்கும்,  சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 66,320 ரூபாவுக்கும் விற்பனையானது.

 

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,14,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05