Header Logo
SLIC
கிழக்கு
மட்டக்களப்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த பிரபல கட்சிகள்

Mar 20, 2025 - 03:34 PM

மட்டக்களப்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த பிரபல கட்சிகள்
Mobitel Inner 1278
EDEX Inner

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக போட்டியிடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வேட்புமனுக்கள் கையளிக்கும் இறுதி நாளான இன்று (20) மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜே.ஜே.முரளீதரனிடம் வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் இராஜஙாக் அமைச்சர்களான சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதேபோன்று ஆளும் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையிலும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.நளீம் தலைமையில் வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.

இதேபோன்று ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல்செய்யப்பட்டன.

அத்துடன் ஈபிடிபியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தலைமையில் வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டதுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் 11 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278