Header Logo
SLIC
மலையகம்
வேட்புமனு தாக்கல் செய்த ஜீவன் தொண்டமான்

Mar 20, 2025 - 07:15 PM

வேட்புமனு தாக்கல் செய்த ஜீவன் தொண்டமான்
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள் இன்று (20) நுவரெலியா மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

மத்திய மாகாணம் நுவரெலியா  மாவட்டத்தில், 2025 உள்ளூராட்சி மன்றம் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை  சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது. வளப்பனை பிரதேச சபை மாத்திரம் நாற்காலி சின்னத்தில் போட்டியிடுகின்றது.

 

நுவரெலியா  மாவட்டத்தில் நுவரெலியா மாநகரசபை, ஹட்டன் - டிக்கோயா நகரசபை, தலவாக்கலை - லிந்துள்ள நகரசபை மற்றும் மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை, அம்பகமுவ, கொத்மலை, வளப்பனை, ஹங்குராகெத்த பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தேர்தல் கடமைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக காரியாலயத்தில் தாக்கல் செய்யபட்டது.

 

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நிதிச் செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், இ.தொ.கா உயர்மட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

 

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

 

கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது. நிர்வாக தவறு இருக்குமென ஆரம்பத்தில் நினைத்தோம். காரணம் என்னவென்று வினவியபோது, இதன் பின்னணியில் சூழ்ச்சி ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

எனவே, இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். நல்ல முடிவு கிட்டும் என நினைக்கின்றோம். நீதிமன்றத்தை நம்புகின்றோம். இவர்கள் வழங்கியுள்ள காரணம், ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில்தான் உள்ளது.

 

ஏனைய தொகுதிகளில் எமது நிலைவரம் சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் எப்போதும் கொடி கட்டி பறக்கும்." - என்றார்.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278