Header Logo
SLIC
கிழக்கு
161 ஆவது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம்

Mar 21, 2025 - 02:53 PM

161 ஆவது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம்
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி உயிரிழந்த பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களை நினைவு கூறும் தேசிய பொலிஸ் வீரர்கள் தினத்தையிட்டு இன்று (21) மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் காரியாலத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர மலர் வளையம் வைத்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.

 

நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் திணைக்களங்களிலும் நினைவு கூறப்பட்டுவரும் பொலிஸ் தினத்தையிட்டு மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் காரியாலத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டு. தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தலைமையில் இடம்பெற்றது.

 

இதில் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தின மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உயிர் நீத்தவர்களின் உறவுகள் கலந்து கொண்டு பொலிஸ் திணைகள கொடியேற்றப்பட்டு பொலஜஸ் மரியாதை அணிவகுப்புடன் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

மாவனெல்ல பிரதேசத்தில் 1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட சபான் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் முதல் முதல் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து மார்ச் 21 ஆம் திகதி பொலிஸ் வீரர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.

 

1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி முதல் இன்று வரையான காலத்தில் சுமார் 5,759 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டதுடன் மாகாணத்தில் 417 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  


MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278