Header Logo
SLIC
மலையகம்
போதைப்பொருள் கொண்டு சென்றவர்கள் கைது!

Mar 23, 2025 - 03:08 PM

போதைப்பொருள் கொண்டு சென்றவர்கள் கைது!
Mobitel Inner 1278
EDEX Inner

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக சென்றவர்களில் போதைப்பொருட்களை எடுத்துச் சென்ற சிலர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பிரதேச பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.

 

சந்தேக நபர்கள் ஹஷிஷ், கஞ்சா, கஞ்சா கலந்த மோதக மாத்திரைகள் மற்றும் புகையிலை கலந்த மாவா ஆகியவற்றை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சிவனொளிபாதமலை யாத்திரையின் போது போதைப்பொருள் கொண்டு சென்றவர்களை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுடன் இணைந்து, நல்லதண்ணி, மஸ்கெலியா, பொல்பிட்டிய, நோர்டன்பிரிட்ஜ், கினிகத்தேனை மற்றும் நோர்வூட் ஆகிய பொலிஸ் நிலைய பொலிஸாரின் உதவியுடன் இவ்வாறு 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சந்தேக நபர்கள் 25 - 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுதத் நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதற்கிடையில், அதிகமான ஒளி சாதனங்கள் பொருத்தப்பட்டு சிவனொளிபாதமலை யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பல தனியார் பஸ்களையும் பொலிஸார் சோதனையிட்டனர்.

 

மேலும், இந்த பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக சாதனங்களை அகற்றி அப்புறப்படுத்துமாறு பஸ் ஓட்டுநர்களுக்கு பொலிஸார் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278