Header Logo
Mogo Academy

கிழக்கு
உழவு இயந்திர கலப்பையில் சிக்கி பலியான இளைஞன்

Mar 23, 2025 - 04:58 PM -

0

உழவு இயந்திர கலப்பையில் சிக்கி பலியான இளைஞன்
Mobitel inner

வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து சுழல் கலப்பையில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அகத்திக்குளம் பிரதேச  வயலில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (22) அன்று மேற்படி பகுதியில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் கண்ணகி கிராமத்தை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க பெ.ஜீரோசன் என அடையாளம் காணப்பட்டார்.

குறித்த இளைஞன் குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வருவதுடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலையில் இருந்து இடைவிலகி பல்வேறு தொழில் புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் உழவு இயந்திர சாரதியாக வேண்டும் எனும் ஆசையில் நெருங்கிய நண்பரொருவருடன் உழவு இயந்திரத்தில் பயிற்சி எடுத்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன் உழவு இயந்திரத்தின் சாரதியான உயிரிழந்தவரின் நண்பன் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara