Header Logo
SLIC
மலையகம்
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் திறந்து வைப்பு

Mar 25, 2025 - 03:11 PM

சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் திறந்து வைப்பு
Mobitel Inner 1278
EDEX Inner


இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் கீழ் மாகாண அபிவிருத்தி நிதியின் கீழ் 10 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட லிந்துல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் திறப்பு விழா இடம்பெற்றது.

 

இக்காரியாலயம் பல வருடகாலத்தின் பின்னர் எதிர்ப்பு போராட்டங்கள் செய்யப்பட்டு புதிய இடத்தில் முழுமையாக அமைக்கப்பட்டு சமய  சம்பிரதாயபூர்வமாக இன்று (25) திறந்து வைக்கப்பட்டது.

 

இதற்கு முன்னதாக பயன்படுத்திய நுவரெலியா பிராந்திய சுகாதார காரியாலய பிரிவுக்குட்பட்ட லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அமைந்துள்ள கட்டிடத்தின் பின்புறத்தில் காணப்படும் பாரிய மண்மேட்டிலிருந்து மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக அவ்விடத்தில் இருந்து வெளியேறி நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல பெரேராவை லிந்துல சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் து. ரெஷ்னி உட்பட சுகாதார அதிகாரிகள் சந்தித்து இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

இதற்கு அமைவாக இவ் புதிய கட்டிடத்தை அமைத்து பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

 

குறித்த நிகழ்வில் விசேட அதிதிகள் பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டு விசேட பூஜைகள் இடம்பெற்றதன் பின்னர் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் நிஹால் வீரசூரிய மற்றும்  மத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜகத் அதிகாரி, கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர்.

 

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் மதுர செனவிரத்ன பங்கேற்புடன் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர், நுவரெலியா மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆரச்சி இவ் புதிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278