Header Logo
Mogo Academy

கிழக்கு
ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையத்திற்கு தண்டப்பணம் விதிப்பு

Mar 27, 2025 - 11:57 AM -

0

ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையத்திற்கு தண்டப்பணம் விதிப்பு
Mobitel inner

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட  உணவக உரிமையாளர்கள் உட்பட ஐஸ்கிரீம் உற்பத்தி விற்பனை நிலையத்திற்கு  எதிராக ரூபா 70,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டு எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.

 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

 

இதன் போது பலசரக்கு கடைகள், ஹோட்டல்கள், துரித உணவுக் கடைகள், ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையம் போன்ற சுகாதார நடை முறைகளை பின்பற்றாத  உரிமையாளர்களுக்கு நேற்று (26)  சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில்   வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு  ஆஜர் படுத்திய போது  எதிராக தலா 25,000 ரூபா, 15,000 ரூபா, 20,000 ரூபா, 10,000 ரூபா உள்ளடங்கலாக 70,000 தண்டப்பணம் அறவிடப்பட்டதுமின்றி எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.

 

மேலும் ஹோட்டல்  ஐஸ்கிரீம் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன் இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறும் முன்னேற்றம் காணப்படாத விடத்து மூடுவதற்கான இறுதி உத்தரவு வழங்க நீதிவானினால் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara