Header Logo
Mogo Academy

கிழக்கு
சட்டவிரோத மீன்பிடி தடுத்து நிறுத்தப்படும்

Mar 27, 2025 - 05:40 PM -

0

சட்டவிரோத மீன்பிடி தடுத்து நிறுத்தப்படும்
Mobitel inner


கிழக்கு மாகாணத்தில் கடல் வளங்களை பயன்படுத்தி மீனவர்கள் அதிகளவான வருமானங்களை ஈட்டும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில்  நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

 

கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அலுவலகத்திற்கு கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (27) திகதி விஜயம் மேற்கொண்டு மீனவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

 

அமைச்சராக பதவி ஏற்றதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முதல் தடவையாக விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் மீனவர்களின் குறை நிறைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

 

இதன் போது மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக அமைச்சரிடம் முன் வைத்தனைத் தொடர்ந்து குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வினை மிக விரைவாக பெற்றுத் தருவதாகவும், சட்டவிரோத மீன்பிடியை தடுத்து கடல் வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் போரிலேயே அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மீனவர்களுடனான குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

 

ஆற்றினை ஆளப்படுத்துதல், களப்பு இறங்குதுறை அமைத்தல், புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கூடிய அளவிலான மீன்  பிடி வசதிகளை ஏற்படுத்தவும், சட்டவிரோத மீன்பிடி வலைகளை தடுக்கும் முகமாகவும் பல கோரிக்கைகளும், ஆள் கடல் மீன் பிடி தொடர்பாகவும் இதன் போது மீனவர்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

 

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீர்யல்வள உதவி பணிப்பாளர் றுக்சான் குரூஸ், மற்றும்  கடற் தொழிலாளர்கள், மீனவர் சங்கத் தலைவர்கள் என பலர் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.
 

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara