Header Logo
SLIC
கிழக்கு
த.வி.கூ. முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து பிணையில் விடுவிப்பு

Apr 3, 2025 - 06:52 PM

த.வி.கூ. முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து பிணையில் விடுவிப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை 3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (3) விடுவித்துள்ளது. 

மட்டக்களப்பை சேர்ந்த கனடா நாட்டிலுள்ள தனிநபர் ஒருவருடன் இணைந்து இருவரும் வர்த்தக நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்ட நிலையில், அந்த வர்த்தக செயற்பாட்டிற்கு அவரிடமிருந்து இருந்து 3 கோடியே 70 இலச்சம் ரூபா பணத்தை பெற்று அதற்கான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடாமல் நிதி மோசடி செய்தார் என கனடா நாட்டிலுள்ள தனிநபர் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மோசடி பிரிவினரிடம் முறப்பாடு செய்துள்ளார் 

இதனையடுத்து குறித்த முறைப்பாட்டுக்கு அமைய தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் பாசிக்குடா தனியார் ஹோட்டலில் இருந்த நிலையில் அவரை கொழும்பில் இருந்த சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று (02) கைது செய்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட அவரை இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அருண் தம்பிமுத்து சார்பாக ஆஜராகிய கமகே தலைமையிலான சட்டத்தரணிகள் இது ஒரு சிவில் வழக்கு வர்த்தகம் தொடர்பானது எனவும், இதனை நிதி மோசடி என சோடிக்கப்பட்டு முறைப்பாடு செய்துள்ளதாக வாதங்களை முன்வைத்திருந்தனர். 

பின்னர் இரு தரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை 3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறமதியான இரண்டு சரீர பிணையில் விடுவித்து எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278