Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
மின்சார வாகன அனுமதிப் பத்திரத்தில் பல மோசடிகள்

Apr 4, 2025 - 03:38 PM

மின்சார வாகன அனுமதிப் பத்திரத்தில் பல மோசடிகள்
Mobitel inner

வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களின் அடிப்படையில் வெளிநாட்டு பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோபா குழுவின் விசாரணையின் போது, அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதில் பண மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.


2024 செப்டம்பர் 30 வரை இறக்குமதி செய்யப்பட்ட 921 வாகனங்களுக்கு சொகுசு வாகன வரி விலக்கு  உயர்த்தப்பட்டதன் காரணமாக, அரசாங்கத்திற்கு 2.42 பில்லியன் ரூபாய் வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும், இரண்டு முக்கிய நிறுவனங்கள் 640 அனுமதிப்பத்திர பெறுநர்களுக்கு வசதிகளை வழங்கிய இறக்குமதியாளர்களாக செயல்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.


கோபா குழுவில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.


குறித்த வெளிப்படுத்தலின் படி, அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் போர்வையில் வியாபாரம் ஒன்று நடந்துள்ளதாக கோபா குழுவிற்கு தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லாத நான்கு (4) நபர்களுக்கு மின்சார வாகன அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், முன்னாள் அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் இவை அனைத்தையும் செய்ததாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara