Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
மீண்டும் ஒரு வீழ்ச்சியை​ நாடு தாங்காது

Apr 5, 2025 - 11:30 AM

மீண்டும் ஒரு வீழ்ச்சியை​ நாடு தாங்காது
Mobitel Inner 1278

தனி ஒரு நாடாக, இலங்கையின் ஏற்றுமதியில் அதிக பங்கான 25 விகிதத்தை இறக்குமதி செய்யும் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி விதிப்பின் பின்னரான நிலைமையின் பாரதூரத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உணர வேண்டும்.

 

இது பழைய இடதுசாரி அரசியல் செய்யும் நேரமில்லை. மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி யுகத்தை நம் நாடு தாங்காது. தொழிற்துறை முடங்கி, வர்த்தகம் வீழ்ச்சி அடைந்து, பண புழக்கம் குறைய விட கூடாது. மிக சரியான சந்தர்ப்பத்தில் இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை நாம் இறுக பற்றி, வளர்ச்சி அடையும் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவுடன் சேர்ந்து கரையேற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

 

அமெரிக்க வரி விதிப்பு, இந்திய பிரதமர் வருகை ஆகியன தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

 

ஜனாதிபதி ட்ரம்பின் வரி போரின் (tarif war) காரணமாக இலங்கையின் ஏற்றுமதியில் அதிக பங்கை கொண்ட அமெரிக்க சந்தை பறி போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது எமது ஏற்றுமதியில் 25% ஆகும்.

 

அதேபோல் விரைவில், ஜீஎஸ்பி+ (GSP+) நிபந்தனைகளை எடுத்து கொண்டு ஐரோப்பிய யூனியன் குழு இலங்கை வருகிறது. 


ஐரோப்பிய சந்தையும் இப்படியே சிக்கலுக்கு உள்ளானால், நம் நாட்டு ஆடை ஏற்றுமதி தொழில் துறை முழுமையாக ஸ்தம்பிதம் அடையும். வர்த்தகம் வீழ்ச்சி அடைந்து, பண புழக்கம் குறையும்.

 

புதிய உலக ஒழுங்கின் படி, இன்று பல்தரப்பு (multilateral) உலக மயமாக்கல் ஒப்பந்தங்கள், மெல்ல, மெல்ல, வழக்கழிந்து போவதையும், இரண்டு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர (bilateral) வர்த்தக ஒப்பந்தங்கள் மேல் எழுந்து வருவதையும் இடதுசாரி அரசியல் கட்சி தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

 

கடந்த கால இலங்கை அரசுகள், இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா, போன்ற பல்வேறு நாடுகளுடன், பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ய முயன்ற போது, அவற்றை, எதிர்த்து பல்கலைக்கழக மாணவர் அணி, தொழிற்சங்க படை ஆகியவற்றை தெருவில் இறக்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தடுத்த தமது பாவத்தை கழுவ வேண்டிய நிலைமைக்கு இன்று ஜேவிபி தள்ளப்பட்டுள்ளது.

 

ஆகவே இது பழைய அரசியல் செய்யும் நேரமில்லை. நிலைமையின் பாரதூரத்தை அநுர குமார திசாநாயக்க உணர வேண்டும். இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற உலகின் முன்னேறிவரும் பொருளாதார சக்திகளுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ய ஜனாதிபதி முன்வர வேண்டும்.

 

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா வளர்ச்சி அடைந்து உள்ளது. அடுத்து வரும் பத்தாண்டில் உலகின் மூன்றாவது பொருளாதார சக்தியாக வளர வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இந்தியாவுக்கு உள்ளது. இலங்கைக்கு உதவிட இந்தியா மிக ஆர்வமாக உள்ளது.

 

மிக சரியான சந்தர்ப்பத்தில் இன்று இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை இறுக பற்றி, வளர்ச்சி அடையும் பொருளாதார நாடான இந்தியாவுடன் சேர்ந்து நாம் கரையேற வேண்டும். அதற்குரிய முறையில் இந்திய பிரதமரின் விஜயத்தை நாம் கையாள வேண்டும் என அரசாங்கதுக்கு நல்லெண்ணத்துடன் கூறி வைக்க விரும்புகிறேன் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!