Header Logo
SLIC
கிழக்கு
இந்த NPP அரசும் தனி இனவாதமாக செயல்படுகின்றது

Apr 8, 2025 - 12:03 PM

இந்த NPP அரசும் தனி இனவாதமாக செயல்படுகின்றது
Mobitel Inner 1278
EDEX Inner

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்த போது அரசை பிரதி நிதித்துவப்படுத்தும் குழுவில் ஓர் தமிழரோ, முஸ்லீமோ, மலையகத் தமிழரோ இல்லை (தமிழ் பிரதிநிதிகளே இல்லை). அவர்களின் உறுப்பினர்களில் தமிழ் பிரதிநிதிகள் இருந்தும் அவர்கள் அழைக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
 

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் நேற்று (07) மாலை மட்டக்களப்பு, மகிழுர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 

ஒதுக்கபட்டர்களோ தெரியவில்லை. அரசு முழு இனவாதமாக செயல்படுகின்றது. தமில் மக்கள் எமக்கு வாக்களிக்காமல் விட்டிருந்தால் அவர்கள் அனுராதபுரத்தில் கூட்டத்தை வைத்து அவர்களின் இன பிரச்னையை மாத்திரம் கதைத்து விட்டு அனுப்பி இருப்பார்கள்.
 

மக்கள் எமக்கு வாக்களித்ததினால் எம்மால் இந்திய பிரதமரை சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைத்து மக்களின் பிரச்சனைகளை கையாள கூடியதாக இருந்தது. இம்முறை மக்கள் சிந்தித்து இவ் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கான பிரச்சனைகளை தமிழ் பேசும் மக்களே கையாள வேண்டும். அதனால் மக்களே சிந்தியுங்கள்.
 

கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியனுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51 மில்லியன் ரூபாவினை மட்டுமே மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278