Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
நீர்கொழும்பில் சிக்கிய பெருந்தொகையான கேரளக் கஞ்சா!

Apr 11, 2025 - 09:49 AM

நீர்கொழும்பில் சிக்கிய பெருந்தொகையான கேரளக் கஞ்சா!
Mobitel Inner 1278

நீர்கொழும்பின், பிடிபன பகுதியில் இருந்து ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (10) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 மற்றும் 42 வயதுடைய மன்னார் - பேசாலையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையின் களனி நிறுவனத்தின் கடற்படையினருடன்,  துன்கல்பிட்டிய பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கேரளக் கஞ்சாவுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

 

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொரியொன்றை படையினர் சோதனை செய்துள்ளனர்.

 

இதன்போது, குறித்த லொறியில் இருந்து ஐந்து உரப் பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 187 கிலோ 875 கிராம் கேரளக் கஞ்சா இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, இந்த கேலளக் கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்  சொகுசுக் கார் ஒன்று கெசல்வத்தை பகுதியில் வைத்து துன்கல்பிட்டிய பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரால் சோதனை செய்யப்பட்டது.

 

இதன்போது குறித்த சொகுசுக் காரில் ஒன்பது பார்சல்களில் அடைக்கப்பட்ட 18 கிலோ 83 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

 

இவ்வாறு துன்கல்பிட்டிய பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவின் பெறுமதி 82 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா,  லொரி , சொகுசுக் கார் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக துன்கல்பிட்டிய பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278